Thursday, August 27, 2015

எல்லாம் அவன் செயல்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவஜோதி சித்தர் சுவாமிகள் கண்கள் மூடி அழ்ந்த த்யானத்தில் அமர்ந்திருந்தார். சடை முடியும், முரட்டு தாடியும், கழுத்தை சுற்றி இருந்த ருத்ராக்ஷ மாலையும் அவரது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பட்டதை பறைசாற்றின. அவரை சுற்றி அவரது பக்த்தர்கள் அவர் வாய்மொழியை எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர். அவரது சிஷ்ய கொடிகளில் ஒருவன் அவருக்கு சற சரவென சத்தம் இடும் அளவுக்கு வேன்ஜாரமரம் வீசிக்கொண்டிருந்தான். வயது உணற முடியாத அவரது முகம் சலனம் இல்லாமல் ஏகாந்த த்யானத்தில் ப்ரகாசமாகவே தெரிந்தது அவரது பக்தர்களுக்கு.
“சாமி, இப்ப முழிசிக்குவாறு. அப்புறம் யாராச்சும் குப்ட்டு அருள் சொல்வாரு. சாமி சொல்றது எல்லாம் பலிக்குதாம்” என்று பக்த கோடிகளில் ஒரு கோடி மற்றொரு கோடியை பார்த்து சற்று உரக்கவே சொல்லிக்கொண்டு இருந்தது. உடனே காவி அணிந்த ஒரு மொட்டை சிஷ்யன் அருகே சென்று, “பேசாதீங்க, தயவு செய்து அமைதி காக்கவும். சுவாமி த்யானம் செய்கிறார்” என்று முணு முணுத்தான். அதற்குள் அனைவரும் சல சலக்க ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் தனது மொச்சை கொட்டை கண்களை மெல்ல திறந்தார். அனைவரும் “சிவமே ஜெயம், ஜெயமே சிவம்” என்று உரக்க சொல்ல ஆரம்பித்தனர். சிஷ்யர்களும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ முன்பு சப்பலம் இட்டு அமர்ந்துக்கொண்டனர். மீதம் இருந்த பக்தர்கள் அந்த சிஷ்யர்களை பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதை மெளனமாக அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தாள் சீதா. அவள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீயின் நீண்ட நாள் பக்தை. கணவன் இறந்ததுலிருந்து அவள் பல சாமியார்களிடம் ஆன்மீக உபதேசம் தேடி அலைந்திருக்கிறாள். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அவளுக்கு கடந்த பத்து வருடங்களாக ஒரு ஆன்மீக குருவாக திகழ்கிறார். இன்று அவள் மனதில் ஒரே ஒரு கேள்விதான் வாட்டிக்கொண்டு இருந்தது, அவள் மகன் ரிஷியின் திருமணம். கணினி அலுவுலகம் ஒன்றில் டெலிவரி மேனேஜராக வேலை பார்க்கும் அவனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று பெண் பார்த்து கடந்த இரண்டு வருடங்களில் சலித்தே போய்விட்டது அவளுக்கு. சாமியரிடம் அதை பற்றி பேச வேண்டி அமர்ந்திருந்தாள்.
“எங்க, இவளவு பேர் இருக்கா, இவாள்ள நமள்ள எங்க கூப்ட போறா சுவாமிகள். இப்டியே வேண்டிண்டு ஆத்துக்கு போக வேண்டியதுதான்” என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அவர் சிஷ்யனை முன்னால் அழைத்து, அவனது காதில் ஏதோ சொல்கிறார், அவளை பார்த்து கைகாட்டுகிறார்.
“வாம்மா சீதா. எப்படி இருக்கே?” என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அவள் சிஷ்யனுடன் அருகே வந்தவுடன்.
“உங்க அருளால க்ஷேமமா இருக்கேன் சுவாமி. ஒரே ஒரு கவலைதான் பாக்கி. அதுக்கும் அருள்புரிஞ்ஜெள்னா நிம்மத்தியா இருப்பேன்”
“உன் கவலை என்னனு எனக்கு தெரியும். சஞ்சலப்படாதே. இன்று நீ இங்கு வரவேண்டியதும் விதி, உனது கவலை தீரப்போவதும் விதி. எல்லாம் அவன் செயல்”
“சுவாமி....”
“ஆம்,மகளே. உனது மகனின் திருமணம் இன்னும் இரண்டு மாதத்திற்குள் நிகழும், அது என் அப்பன் எனக்கு சொன்னது, நான் இப்ப உனக்கு சொல்றேன்.”
“எப்படி சுவாமி. அவன் தான் பாக்கர பெண்கள் எல்லாத்தையும் எதாவது சொல்லி தட்டி கழிக்கரானே. அவனுக்கு ஜாதகம் செரர்தே அபூர்வம், இதுல இவன் வேற…”
“கவலை படாதே. நீ உனது மகனை அழைத்துக்கொண்டு ஒருமுறை கோவிந்தவாடி குரு கோவிலுக்கு சென்று வா. குருப்பார்வை அவன்மேல் விழத்தொடங்கி அந்த குருமூர்த்தியே அவனுக்கு நல்வழி அருள்வார். முதல் எழுத்தில் துவங்கம் பெயர் கொண்ட உன் மருமகள நீ அன்னிக்கு நிச்சயம் சந்திப்பே”
“அப்படியே செய்யறேன் சுவாமி. எல்லாம் உங்கள் அருள் சுவாமி”
“அப்படி சொல்லாதே, எல்லாம் அவன் செயல்”
**********
“அம்மா கோவில் கீவில்லாம் நான் வர மாட்டேன். ஐ டோன்ட் பிலீவ் இந் ஆல் தட். நீ வேண்ணா போயிட்டு வா”
“டேய் உனக்கு நம்பிக்கை இல்லனா பரவால்ல, உன்ன விட்டா யார் டா அம்மாவை அங்க கூட்டிகிட்டு போறது, சொல்லு?”
“ஆமா, இப்படி சொல்லியே மடக்கு. வரேன், உள்ள வா, பாட்டு பாடுனுலாம் சொல்லக்கூடாது”
“நீ என்ன ட்ராப் பண்ணிட்டு கூட்டிட்டு வந்தா போதும்..”
சிறிது நேரத்தில் இருவரும் அவனது ஆல்டோ காரில் புறப்பட்டனர். வானொலியில் நச்சுன்னு நாலு பாட்டு ஒலிக்க ரிஷி காரை அவர்களது அடையார் வீட்டிலிருந்து கிளப்பி கிண்டி நோக்கி செலுத்த துவங்குகிறான்.
“என்னம்மா அந்த கோவிலுக்கு? அங்க போனா கல்யாணம் ஆயிடுமாமா?”
“ஆமாம்டா, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீயே சொன்னார். உன்னை அந்த கோவிலுக்கு கூட்டிகிட்டு போனா கல்யாணம் நடந்திரும்னு அருள் புரின்ஜார் டா. அந்த குரு பகவன் பார்வை உன்மேல பட்டுது வச்சிக்கோ, டும் டும் டும் தான்”
“என்ன கொடும மா உன்னோட. நீ இந்த காலத்தில, இதேல்லாம் நம்பரியே?”
“எப்ப பாத்தாலும் விதண்டா வாதம் பேசு. உருப்பிடிய ஒன்னும் நடக்காது. அந்த பகவான் எல்லாருக்கும் நல்லது பண்ணுவார், நாம ஜஸ்ட அவர நம்பினா போரும்”
“ஹா ஹா, நீ நம்பரே ல. என்ன நடக்குதுன்னு பாப்போம். சாமியாமா, கல்யாணம் பண்ணிவெப்பராம”
இருவரும் ஒன்றும் பேசாமல் வானொலியில் ஒலிக்கும் பாடல்களை கேட்டுக்கொண்டு காந்திநகர் மெயின்ரோடில் சென்று கொண்டிருந்தனர்.
“அடுத்த பாடல் வந்து, கல்யாணம் சம்பத்த பட்ட பாட்டு, கேட்டு ஒரு குத்து போடுவமா” என்றது வானொலி. “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாம” என்று வினவியது மறுபடியும் வானொலி.
“என்ன எழவு பாட்டு டா இது, மத்து டா அத”
“நீ வேற, நீ பொண்ணு தேடற வேகத்துக்கு, நானும் அதே பாலிசிய கடைபிடிக்க வேண்டியது தான் போல“ என்றான் ரிஷி வானொலி ஸ்டேஷன் மாற்றிக்கொண்டு.
பேச்சு ச்வரசியத்தில் அவனுக்கு பின்பு ஸ்கூட்டி ஒட்டி கொண்டு வரும் அந்த பெண்ணை ரிஷியோ அவனது அன்னையோ கவனிக்கவில்லை. அவன் செல்லும் வேகத்திலேயே அவனது பின்னே தோடர்வதுபோல் அந்த பெண் வந்துக்கொண்டிருந்தாள்.
“இங்க அடையார் சிக்னல் கிட்ட ஒரு ஹோட்டல் இருக்கு, இட்லி சாப்பிட்டு போலாம். பசிக்குது” என்றான் ரிஷி.
“சரி, அனால் சிக்கிரம் போகணும். கொவிந்தவாடி வரை போகணும். நாழி ஆச்சுனா நடை அடச்சுடுவா”
பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவனது முன்பு காந்திநகர் கிளப் அருகில் நின்றிருந்த ஒரு டிராபிக் சார்ஜன்ட் தனது கையை உயர்த்தினார். அப்பொழுது மூன்று நிகழ்வுகள் நிகழ்ந்தன. அது ரிஷியின் வாழ்வை புரட்டிப்போட போகிறது என்பது சீதாவுக்கு தெரியாது. ரிஷியின் வலது கை பக்கம் வேகமாக வந்துக்கொண்டிருந்த யமஹா மொட்டர்பைக் ரிஷியை தாண்டி அந்த சார்ஜண்டை நோக்கி இடதுகை பக்கம் வேகமாக திரும்பியது. இதைப்பார்த்த ரிஷி ரீ என்று சக்கரம் ஒலி எழுப்ப, தடால் என பிரேக் அடித்து வாகனத்தை நிறுத்தினான். பின்புறம் அவனை தொடர்வதுபோல் வந்துக்கொண்டிருந்த அந்த ஸ்கூட்டி பெண் நேரத்தில் வாகனத்தை நிறுத்த இயலாமல், தொப் என்று ஒலி எழுப்பி அவனது அல்டோவின் பின்புற பம்பர் மீது மோதி நிறுத்தினாள்.
அவனை ஓவர்டேக் செய்து முன்னே சென்ற அந்த யமஹா வாகனமும் அதன் ஓட்டுனரும் அந்த சார்ஜன்ட்டிடம் சென்று நின்றார்கள்.
“என்னயா, ரேஸ் பைக் ஓட்டினா, எங்க பாத்தாலும் ரேஸ் பண்ணுவியா? லைசென்ஸ் எடுயா” என்று அந்த டிராபிக் சார்ஜன்ட் யமஹா இளைஞ்சனை அதட்ட, ரிஷி காரை விட்டு பின்பக்கம் ஓடினான்.
“வாட் தி ஹெக். டூ யு ஹாவ் னோ சென்ஸ். வந்து இப்படி மோதிகிட்டே. பிரேக்னு ஒன்னு இருக்கு தெரியுமா?”
சீதா காரை விட்டு இறங்கினாள். முன்பக்கம் டிராபிக் சார்ஜன்ட், ஒரு கன்ச்டப்ளுடன் அந்த யமஹா இளைஞ்சனை மிரட்ட, பின்புறம் அந்த பெண்ணை ரிஷி மிரட்டிக்கொண்டிருந்தான். பின்னோக்கி நடக்க துவங்கிய சீதாவுக்கு அந்த யமஹா இளைஞ்சனும் ட்ராபிக் சார்ஜண்டும் பேசிக்கொண்டிருப்பது சற்றே காதில் விழுந்தது.
“எங்க இருந்துயா வர, ஹெல்மெட் எங்க”
“இங்க தான் சார். காந்திநகர் செகண்ட் கிராஸ் ஸ்ட்ரீட்”
சலான் நிரப்பிக்கொண்டே “பேர் என்னையா? குருமூர்தியா?”
அந்த பெயரை கேட்டவுடன் சீதாவுக்கு முதுகில் மின்னல் வெட்டினார்ப்போல் இருந்தது. ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கூறியது அவளுக்கு நினைவு வந்தது, ...“நீ உனது மகனை அழைத்துக்கொண்டு ஒருமுறை கோவிந்தவாடி குரு கோவிலுக்கு சென்று வா. குருப்பார்வை அவன்மேல் விழத்தொடங்கி அந்த குருமூர்த்தியே அவனுக்கு நல்வழி அருள்வார். முதல் எழுத்தில் துவங்கம் பெயர் கொண்ட உன் மருமகள நீ அன்னிக்கு நிச்சயம் சந்திப்பே”.... குருமூர்த்தி என்ற அந்த இளைஞ்சனை ஒரு முறை பார்த்தாள். அவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்த டிராபிக் கான்ஸ்டபிளை தாண்டி வேகமாக ரிஷியையும் அந்த பெண்ணையும் அடைந்தாள்.
“யு ஹாவ் டு பெ போர் திஸ். இந்த பம்பர் நசிங்கிருக்கு, யு வில் பெ போர் தி ரிபைர்ஸ்”
“ஹ நல்லா இருக்கே. நீங்க திடீர்னு பிரேக் அடிச்சா நா என்ன பண்றது. ஹவ் டூ ஐ னோ யு ஆர் கோயங் டு ஸ்டாப்?”
சீதா சட் என்று உள்ளே புகுந்து வளரவிருக்கும் சண்டையை தவிர்த்தாள்.
“டேய் ரிஷி, சும்மா இரு. போம்மநாட்டிஅண்ட சண்டைபோட்டுண்டு” அந்த பெண்ணை பார்த்து “நீ பயப்படாத மா. இந்த பம்பர்லாம் நாங்க பாத்துக்கறோம். உன் பேர் என்னம்மா கொழந்த”
“ஆர்த்தி”
*****************
பெசன்ட் நகரில் ஒரு துரித உணவு ஹோட்டல் ஜன்னல் அருகில் இருக்கும் டேபிள் ஒன்றில் ரிஷி அமர்ந்து கொண்டிருந்தான். அவனது முன் குருமூர்த்தி என்ற அந்த யமஹா இளைஞ்சன்.
“ஏன்டா போலிச பார்த்தா அப்டிய டா கட் கொடுப்ப. நல்ல வேளை ஒன்னும் நடக்கல”
“ஆமா டா. ஏற்கனவே நமக்கும் மாமாவுக்கும் ஆகாது. அதுல அந்த சார்ஜன்ட் வேற ஒரு கடி பிடிச்ச ஆளு. எப்பவும் ஹெல்மெட் இல்லாம அவன்கிட்ட மட்டுவேன்”
ரிஷியின் கைபேசி ஒலிக்கிறது. மறுமுனை ஆர்த்தி...
“ஹனி, யுவர் பிளான் வர்க்டு. உங்க அம்மா, எங்க அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க. ஐ தின்க், திஸ் இஸ் இட்”
“ஏன் கவலை படறே, எங்க அம்மாவை பொறுத்த வரைக்கும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வாக்கு, வேத வாக்கு. வி ஆர் கெட்டிங் மாறிட், பேபி”
“ஆனாலும் ரெஸ்டாரன்ட் சந்திப்பு இப்படி தெருமுனையிலேயே முடிஞ்சிரும்னு எதிர் பக்கல. பை தி வே, அந்த சாம்யார எப்படி கரெக்ட் பண்ணே டா”
“எல்லாருக்கும் ஒரு விலை, சுவாமியின் விலை ஒரு கிரீன் லேபில், இம்போர்டேட் ஸ்காட்ச். சுவாமி மது மாதுனு சந்தோஷமா இருக்கறவர்”
“அட பாவி. சரி ஏதோ, உங்க அம்மா ஜாதகம் மேட்ச் பண்ண அந்த ஆள் கிட்ட போக போறாங்க”
“ஏன் கவலை படறே? நம்ம குருமூர்த்தி இருக்க பயம் ஏன்,எல்லாம் அவன் செயல்”
“ஆமா டா உங்க சூப்புக்கு நன்க தான் நூடில்சு” அது குருமூர்த்தி.
“சரி ஓகே, நான் வைக்கறேன், அப்பா கூபிட்றார்”
கைபேசி இணைப்பை துண்டித்து அந்த உணவு விடுதியை வெற்றி கொண்ட மன்னர் போல நோட்டமிட்டன ரிஷி. அவனது தாய் அவன் காதலுக்கு ஒப்புதல் அளிக்க இதை விட வேறு ஒரு வழி இருப்பதாக தெரியவில்லை.
“சரி ஏதோ, கல்யாணம் நிச்சயம் ஆகா போகருது. அந்த சாமியாருக்கு வாங்கி கொடுத்த கிரீன் லேபில் வீண் போகல. ஆனா அந்த ரெஸ்டாரன்ட்ல வச்சுதான் அம்மாவுக்கு உன் மூலமா ஆர்த்திய இன்ற்றோடுஸ் பண்ணனும்னு இருந்தேன். ஆனா அதுக்கு முன்னால அம்மாவே இன்ற்றோடுஸ் பணிகிட்டாங்க”
“ஆமா நா பைக் எடுத்து வரப்ப நீ அங்க இருப்பேன்னு நா எதிர்பாக்கல. லேட் ஆயிருச்செனுதான் அவள்ளவு வேகமா வந்தேன். அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சு. அண்ட் தட் டூ, அஸ் வி எக்ஸ்பெக்டேட்”
“எஸ். ஆல் தேங்க்ஸ் டு யு நண்பா”
“ஹ ஹ, அப்படி சொல்லாதே, கன்சிட்ரிங் வாட் ஹப்பேன்டு , எல்லாம் அவன் செயல்!!!”

(முற்றும்)

கண்கள்

அது அண்ணா சாலையில் டிராபிக் விளக்குகள் கண் சிமிட்டி கொண்டிருந்த நேரம். ரிஷியும் அவனது நண்பர்களும் வாரம் முடிந்ததை கொண்டாடி கொண்டிருந்தார்கள்.  பாண்டி பஜாரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் மது அருந்தி விட்டு கிழக்கு கடற்க்கரை சாலை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். ரிஷி அவனது பீ எம் டபிள்யு வண்டியை வெளிநாடுகளில் ஓட்டுகின்ற அதே வேகத்தில் சென்னை அண்ணா சாலை வழியாக ஓட்டி தனது ஓட்டுனர் திறமையை அவனது நண்பர்களிடம் குறிப்பாக அவன் அறிகே உட்கார்ந்து இருந்த சோனியா விடம் காட்டி கொண்டிருந்தான்.


"டேய், ஸ்பீட கொஞ்சம் கம்மி பண்ணு டா வெளிய என்ன இருக்குனு கூட தெரியல" அது கவலையுடன் சோனியா.

"Common, this is just 100 kmph, besides இப்ப மணி நைட் ‌12:30, ரோட்டில டிராபிக் சுத்தமா இல்ல, ஜஸ்ட என்ஜாய். ஈ.சி.ர் ல போன அப்புறம் ரியல் வேகம் நா என்ன நு கட்டறேன்" என்றான் ரிஷி

"நீ ஒட்டு மச்சான், டோன்ட் வொர்ரி" இது பின்னால் உட்க்கந்திருக்கும் அவனது மற்ற நண்பர்களின் கோரிக்கை.

குடி போதையில் திக்கு தெரியாமல் காரை சற மாரியாக ஒட்டி கொண்டிருந்த அவர்கள் அண்ணா சாலையில் நந்தனம் வழியாக சென்று கொண்டிருந்த பொழுது தான் அந்த விபத்து நேரிட்டது.

'மச்சி, மெயின் ரோடிலே அங்க மாமா நின்னுருபாங்க டா. இங்க வர லெப்ட் எடு. நோ ச்லோவிங் டௌன் போர் தீஸ் டாக்ஸ்" இது பின்னாலிருந்து ஒரு நண்பன் குரல். அவன் மாமா என்றும், டாக்ஸ் என்றும் பாசமாக அழைத்தது நமது காவல் துறையை தான்.

ரிஷி இடது பக்கம் ஒரு சிறிய சந்துக்குள் அவன் காரை நுழைத்தான்.
"ரிஷி, இந்த ரோடுல ஆளுங்கலாம் ரோட்டிலேயே படுதிருப்பங்க டா, பீ கேர்புல். ச்லோவ்வ் டௌன்" என்றால் சோனியா.

பேசி கொண்டிருக்கும் போதே முன்னால் ஒரு கயத்துகட்டில்லில் யாரோ படுத்திருந்தது தெரிந்தது. ரிஷி வந்து கொண்டிருந்த வேகத்தில் அவன் யோசிக்கும் முன்னரே அந்த கட்டிலையும் அதில் படுத்திருந்த முகம் தெரியாத நபரையும் துக்கி அடித்து விட்டான். ஆ என்ற சத்தம் சென்னை இரவை கிழித்து கொண்டு ஒலித்தது. வாகனத்தின் வேகத்தை குறைக்க முயன்று கொண்டிருந்த ரிஷி அந்த கட்டிலில் படுத்திருந்த ஒருவர் அவனது வாகனத்தில் இழுக்க பட்டு வருவதை உணர்ந்தான், ஒரு பத்து மீட்டர்கள் முன்னே சென்ற பின்னர் அவன் வாகனத்தை நிறுத்த முடிந்தது. அந்த வீதி முழுவதும் விளக்குகள் ஒன்றின் பின் ஒன்றாக மிநிக்கிட ஆரம்பித்தன.

"அய்யோ. அவன் செத்துட்டான் டா. நா வேகம் வேண்டாம்னு சொனேன் ல. இப்ப என்ன டா பண்றது" அது சோனியா.

"டேய், நீ கார விட்டு வெளிய வராத, கீப் தி என்ஜின் ரன்னிங்" என்று சொல்லி கொண்டே பின் சீட்டு நண்பன் அவனது கார் கதவை திறந்து அந்த உயிரை சிறிது சிறிதாக இழந்து கொண்டிருந்த நபரை காரின் டயரின் கீழிருந்து இழுத்து தள்ளி விட்டு உள்ளே திரும்பி "கோ கோ கோ, டோன்ட் வெயிட், தி டாக் பாக் வில் பீ அபான் அஸ். வேகமா போ" என்றான்.

"தட் மான் இஸ் ஸ்டில் நோட் டேட். ஹி நீட்ஸ் ஹெல்ப். நாம மெடிக்கல் ஹெல்ப்க்கு போன் பண்ணனும்" கதறினாள் சோனியா, பயத்துடன், செய்வது அறியாத ரிழியை உலுக்கி கொண்டு.

"டேய் காரை கிளப்பு டா. கெளப்பு" என்று அந்த இன்னொரு நண்பன் கத்தினான்.

"கோ கோ கோ, கெளம்பு" என்றான் அந்த வெளிய சென்று வந்த நண்பன்.

வீர் என்று சத்தம் எழுப்பி கொண்டு அந்த கார் அந்த இடத்தை விட்டு கிளம்பியது.

******************

"என்னயா கேசு" என்றார் ராயபெட்டை அரசு மருத்துவமனை டுட்டி டாக்டர் பாதி துக்கத்தில் இருந்த வார்டு பாயை பார்த்து.

"மெட்ரோ ரயில் தொழிலாளிகள் சார். வட நாட்டுகாரங்க. ரோட்டல தூங்கிட்டு இருந்துருக்காங்க சார். எவனோ எத்தி விட்டான் போல" என்றான் அந்த வார்டு பாய் ஹிந்தி குச்சல்கள்ளிக்கு மத்திதியில் தனது குரலை சிறிது உயர்த்திக்கொண்டு.

கொட்டாவி விட்டுக்கொண்டே அந்த கூட்டதை நோக்கி நடந்து சென்ற டாக்டருக்கு வழிவிட்டனர் அந்த வட இந்திய மக்கள். சூயிங் கம் மென்று கொண்டிருந்த நர்ஸ் ஒருத்தி ச்ற்றேட்சேர்ரில் படுத்திருந்த அந்த சிறுமியுயைம் அந்த நடுத்தர வயது நபரையும் பல்ஸ் பார்த்து கொண்டிருந்தார். டாக்டரை பார்த்த உடன், "டாக்டர், டி.ஒ.எ போல இருக்கு, பல்ஸ் இல்ல", என்றாள்.

"ஹ்ம்ம்" என்று முனகிய டாக்டர் இரண்டு பேர்களையும் கழுத்தில் பல்ச பார்த்தார். பின்பு கண்களை திறந்து டோர்ச் அடித்து பார்த்தார். ச்டேதேச்கோப் வைத்து இருதய துடிப்பை பார்த்து விட்டு, பெருமுச்சு விட்டார்.  "டி.ஒ.எ தான். யாரு போலீஸ் ரேப்றேசெண்டடிவ்? " என்று கூபிட்டார். 

கான்ஸ்டபள் ஒருத்தர் தனியே நின்று செல் போனில் பெசிகொண்டிருந்தார். "டாக்டர் ஒரு நிமிஷம் நான் தான்."  என்று சொல்லிக்கொண்டு, போனில் "சார் டாக்டர் கூபிடராறு அப்டேட்ஸ் கேட்டு சொல்றேன்" என்று சொலிக்கொண்டு டாக்டரை நோக்கி நடந்து வந்தார்.

"சார், விக்டிம்ஸ் ரெண்டு பெரும் இறந்துடாங்க. திஸ் இஸ் எ கேஸ் ஒப் டி.ஒ.எ. " என்றார் டாக்டர்.

"சரி டாக்டர். நீங்க டி.ஒ.எ செர்டிபிகாடே கொடுங்க." என்றார். செல் போனில் ஏதோ நம்பர் டயல் செய்து கொண்டு சுவரோரம் சாய்ந்து நின்றார்.

அந்த டாக்டரை ஹிந்தியில் ஏதேதோ பேசிக்கொண்டு அந்த கூட்டம் சூழ்ந்து கொண்டது. அவர் கையை தூக்கிகொண்டு, "இவங்க இறந்துட்டாங்க, உங்களுள தமிழ் தெரிஞ்சவங்க யாரவது இருக்கீங்களா" என்று கேட்டார்

"மெய்ன் ஹூன், டாக்டர் எனிக்கு டமில் புரியம்." என்று சொல்லிக்கொண்டு ஒரு இளைஞ்சன் முன்னே வந்தான்.

"இவங்க ரெண்டு பெரும் இறந்துட்டாங்க. இன்டர்னல் ப்லீடிங். உள்ள இருக்குற உறுப்புக்கள் செயல் இழந்துடுச்சு. கொஞ்சம் சீக்கிரம் கொண்டு வந்துருந்தா காபாத்திருக்கலாம். ஐ அம் சாரி. அவங்க கிட்ட சொல்லிடுங்க" என்றார்.

அந்த இளைஞ்சன் மொழிபெயர்த்து சொல்லும் முன்னே தனது கணவன் மற்றும் குழந்தையின் நிலைமை புரிந்த அந்த பாஷை தெரியாத மனைவி கதறிக்கொண்டு அந்த இரண்டு ச்ற்றேட்சேர்கள் நடுவே மாறி மாறி ஓடி கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் தனது குழந்தையை கட்டி கொண்டு அழுதாள், பின் ஓடி சென்று தனது கணவனை கட்டி கொண்டு அழுதாள்.

இன்ஸ்பெக்டரிடம் பேசிவிட்டு அங்கே வந்த அந்த புது கான்ஸ்டபள் இந்த காட்சியை பார்த்து தானும் கண்கலங்கி விட்டார். அந்த இளைஞன் அந்த பெண்மணியை ஆசுவாச படுத்த முயன்று கொண்டிருந்தான். அந்த சூயிங் கம் மென்று கொண்டிருந்த நர்ஸ் அவசர அவசரமாக அந்த கூட்டத்தை விட்டு விலகினாள். மற்ற ஹிந்தி சக தொழிலாளிகளும் ஹிந்தியிலே ஏதேதோ சொல்லி அழுது கொண்டிருந்தனர்.

டாக்டர் தனது அறையில் இருந்து இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்தார். எழுந்து வந்து தனது மேஜை முன் இருந்த அந்த ஜன்னலை அடைத்து சூழ்ந்து கொண்டிருந்த சோகத்தை அறைக்கு வெளியே அடைத்தார். இது அவர் தினமும் பர்ர்த்து பழிகிப்போன ஒரு காட்சி. அப்பொழுது "எக்ஸ்குஸ் மீ, டாக்டர்" என்று சொல்லிக்கொண்டு அந்த கான்ஸ்டபிள் உள்ளே நுழைந்தார்.

"டாக்டர், இன்ஸ்பெக்டர் போஸ்ட் மோர்டேம் எல்லாம் வேணாம் நு சொளிட்டார்.  கிளியர் கட் கேஸ் ஒப் நெக்ளிஜென்ட் டிரஈவிங். சாட்சி யாருமே இல்ல. யாரையும் இன்வேச்டிகக்ட் பண்ண முடியாது. அப்புறம் விக்டிம்சொட மனைவி அவங்க ஒர்கன்ச தானம் பண்ணும்னு சொல்றாங்க சார்" என்று சொன்னார்.

டாக்டர் தனது ஜன்னலை திறந்து தனது குழந்தையை கட்டி கொண்டு அழுது கொண்டிருந்த அந்த பெண்மணியை மரியாதையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்த தமிழ் தெரிந்த இளைஞ்சன் ஒரு நர்ஸிடம் அவர்கள் குறிப்புகளை கொடுதுக்கொண்டுருந்தான்.

"பேரு"
"சுனைனா , ஷரிப்"
"வயசு?"
"எட்டு , முப்பத்தாறு"

******************

அப்போல்லோ மருத்துவமனையின் சிப் டாக்டர், கோதண்டம் அவரது அறையில் பரபரப்பாக இருந்த திலீப சக்ரவர்த்தியிடம் பேசி கொண்டிருந்தார்.

"அது மேதநோல் போயசொநிங் சார். காரணியா பாதிச்சிருக்கு. உங்க மகன் இனி பார்க்கிறதுக்கு ஒரே வழி கோன்ர்நிய திருன்ச்ப்லான்ட் தான், அது இல்லாம ஹெட் இஞ்சுரிநாலா நிறைய ப்ளட் ப்ளட் லாஸ் வேற"

பல தொழில்களுக்கு அதிபரான திலீப் கண்ணீர் மல்க டாக்டரிடம், "டாக்டர் ப்ளீஸ் டூ சம்திங். என்ன ஆனாலும் பறவாஇல்லை, என் மகன் பாக்கணும். சில கிரிமினல் ஏலேமேன்த்ஸ் இவனை நட்பு காண்பித்து இவனுக்கு கள்ள சாராயம் ஊற்றி கொடுத்து, மண்டையில் அடித்து காரை திருடி கொண்டு விட்டனர். இவன் எப்படியாவது சரியகனும். ப்ளீஸ் டூ சம்திங்" என்று கதறினார்.

திலீப், ரிஷியுடைய தந்தை. தனது மகன் எங்கோ மகாபலிபுரம் அறுகே போதையில் மயங்கி இருப்பதை அறிந்து விரைந்து இருக்கிறார். அங்கே அவன் மட்டும் படுத்து இருக்கிறான், காரையும் அதில் இருந்த அவனது நண்பர்களும் தென்பட வில்லை. அவசர அவசரமாக அவனை, அவரும் அவரது டிரைவரும் தூக்கியபோதுதான் அவனது சிரத்தில் இருந்து குருதி வடிவதை உணர்ந்தார்.
இப்பொழுது ரிஷி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிட்சை அறையில் இருந்தான்.

"நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. நான் கண் வங்கிகள் கிட்ட என்குயரி பண்ண சொல்றேன். எப்ப கிடைக்கும்னு சுறா சொல்ல முடியாது. பட் கிடைச்ச உடனே ரேப்லஸ், பண்ண சொல்லிடறேன். டோன்ட் வொர்ரி. ஐ வில் ஹவ் தி பெஸ்ட் டாக்டர்ஸ் ஒன் திஸ்" என்றார் கோதண்டம்.


அடுத்த நாள் திலீபிர்க்கு போன் செய்தார் கோதண்டம், "மிஸ்டர் திலீப்வி ஆர் லக்கி. ஒரு ஆக்சிடென்ட் கேஸ், எவனோ பணக்காரன் கரை வச்சு ரோட்ல படுத்துகிட்டு இருந்த வோர்கேர்ச எத்திடான். அதுல ஒரு சின்ன பொண்ணு கண்ணு அவைலபுல்லா இருக்கு. நீங்க சொன்ன உடனே ரேகுஸ்ட் பண்ணலாம்." என்றார்

"ஒஹ் தன்க் காட். நான் கும்பிடுற தெய்வம் என்ன கைவிடல. நிச்சயமா டாக்டர். டோன்ட் வொர்ரி அபௌட் மணி. அது நான் பாத்துக்கிறேன். அப்புறம் அந்த டோனோர் பேர் என்ன டாக்டர். ஐ வான்ட் டு டூ சம்திங் போர் தி பாமிலி"

"அந்த பொண்ணு பேரு சுனைனா, மிஸ்டர் திலீப். நேத்து ராத்திரி தான் கார் அக்சிதேன்டுல இறந்துருகாங்க. சின்ன வயசு தான், எட்டு வயசு. பாவம், அவங்க பாமிலி மெட்ரோ ரயில் வோர்கேர்ஸ் போலேருக்கு. அப்பாவும் அக்சிதேன்டுல இறந்துட்டாராம். ஐ சால் கெட் யு தேர் டிடைல்ஸ். நீங்க அவங்க கிட்ட கம்முநிகாட் பணிகாங்க."

போனை வய்த்த திலீப், கண்கள் மூடி அவரது அறையில் இருந்த ஒரு கிருஷ்ணர் படத்தின் முன்னே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்.
எங்கோ "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.


(முற்றும்)

துப்பாக்கி

அந்த அறை நிலவின் நடுவே நட்டு வைத்தார் போல் இருந்தது.  எங்கும் வெள்ளையாக வெள்ளை அடிதிருந்தார்கள். சுளீர் என்று ஜன்னல்கள் வழியாக கசிந்த வெயில் சுவர்களில் தெளித்து அறையை பளிச் வெளிச்சத்தில் ஆழ்த்தியது. அந்த வெள்ளை வெளிச்சத்திற்கு நடுவே அவனது நெற்றி மீது வைக்க பட்டிருந்த துப்பாக்கி மினிக்கிடும் கறுப்பு நிறத்தில் ஒரு கிரகணம் போன்று காட்சி அளித்தது. துப்பாக்கியை பிடித்திருந்தவன் முகம் சரியாக தெரியவில்லை, நிழல் ஆடியது.
அது ஒரு ஸ்மித் அண்ட் வெசன் ரக துப்பாக்கி. ஜேம்ஸ் பான்டிற்கு மிகவும் பிடித்தது.  அது .32 கலிபர் ரேவோல்வேர், கொஞ்சம் ஓல்ட் ஸ்டைல்.  கையில் இதை பிடித்திருந்தவன் ஜேம்ஸ் பாண்ட் இல்லை என்றாலும் இதை நன்கு இயக்க தெரிந்தவன் என்பது புரிந்தது.
அவன் இங்கு எப்படி வந்தான்? பார்ப்போம்..
சற்று முன் நடந்தது.....
எல்லா நாட்களை போலவும் தான் அன்றும் தொடங்கியது அவனுக்கு. காலை உடல் பயிற்சி பின்பு த்யானம். பல வருடங்களாக உழைத்து களைத்த அவனுக்கு இவை முக்கிய தேவைகளாகி விட்டன. அன்று வழக்கத்துக்கு மாறாக எதுவும் நிகழவில்லை, அதுவரை.
தியான மைய்யத்தில் அன்று புதிதாக ஒரு நபரை கவனித்தான். சிறிது வயது முதிர்ந்த அவர் எங்கோ பரிச்சயம் ஆன முகம் போன்று தெரிந்தது. அவர் அருகே சென்று,
“Good Morning, உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே”
சிறிது தனது குரலை தாழ்த்தி, “ச்வப்பன், ரேமேம்பேர் A210? Tel Aviv, Krav Maga classes?”
“சார், எப்படி சார் மறக்கறுது. நீங்க கத்துகொடுத்தது தான் என்னை இப்ப வரைக்கும் பிழைக்க வச்சிருக்கு. And Tel Aviv, Mossad, Krav Maga, those were the best days of my life. Glad to see you again. ரொம்ப நாளா ஏதும் சேதி இல்ல, incognito deployment?”
“Yeh, forward deployment. Classified, தியானம் முடிஞ்சதும் பேசுவோம்”
“Sure” என்று சொல்லிக்கொண்டு விலகினான்.
அவரை சந்தித்ததில் அவனுக்கு மகிழ்ச்சி. அவனது ஆரம்ப வாழ்க்கையில் அவர் ஒரு தந்தை போல இருந்து அவனை வழி நடத்தி உள்ளார். தியனதிற்காக உட்கார்ந்திருந்த மற்றவர்களை கவனித்தான். நிழல் ஆடிய முகங்களில் அபாயம் ஏதும் ஆட வில்லை. நம்பிக்கையுடன் கண் மூடினான். அவனது எண்ணங்கள் பிரம்மாண்ட முழக்கம் இட துவங்கும் நேரம் அது. ஆனால் அன்று அவனது எண்ணங்கள் முழக்கம் இடும் முன்னர் அவன் தியானம் கலைந்தது. காரணம் துப்பாக்கி சுமந்து அறையில் நுழைந்த அவர்கள்.
“Freeze, open your eyes and stay down!”
திடுக் என்று கண்கள் திறந்தான். நான்கு நபர்கள் இருப்பதை உணர்ந்தான். கையில் பேரேட்ட ஆடோமடிக் மற்றும் உசி சப் மாசின் துப்பாக்கி வைத்திருந்தனர். சர சரவென நுழைந்த அவர்களில் ஒருவன் தியானம் நடை பெரும் மொட்டைமாடி படிக்கட்டு அருகே நின்றுவிட்டான். மற்றொருவன் கூடத்தின் மற்றொரு மூலையில் அனைவரையும் நோக்கியவாறு மிரட்டலாக நின்றிருந்தான்.
மீதம் உள்ள இரண்டுபேர் அவரை நோக்கி துப்பாக்கியை நீட்டியவாறு ஓடி வந்தனர். அவனோ செய்வது அறியாது விழித்தான். அவர் முன்னால் துப்பாக்கியை நீட்டி
ஒருவன் “come with us, and no dirty tricks. I don’t want any bloodshed”
மற்றவன் “நீங்க எங்க இருந்தாலும் நாங்க வருவோம்னு சொன்ன்முல”
அவர் அவனை நோக்கி ஏதோ சொல்ல முயற்சிக்கிறார். அனால் அதற்குள் அவர்கள் துப்பாக்கி முனையில் அவரை அழைத்துக்கொண்டு, நுழைந்த வேகத்திலேயே மறைந்து விடுகிறார்கள். அவனக்கு ஒன்றும் புரியவில்லை, அவர் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார் என்பது அவனுக்கு புரிந்தது, அனால் அதற்க்குள் அவர்கள் அவரை இழுத்து சென்று விட்டாரகளே! வீர் என்று ரோட்டில் ஒரு கார் கிளம்பும் சத்தம் கேட்டு திடுக் என்று எழுந்து நின்றான்.

விடு விடுவேன கீழே ஓடி வந்த அவன் தெருவின் நால்புரம் பார்த்தான். அங்கே ஒரு கடத்தல் சம்பவம் நடந்த்தர்க்கான சுவடே இல்லாமல் இருந்தது. அவன், அருகில் இருந்த ஒரு டீ-கடையை நோக்கி ஓடினான். வானொலியில் மிஷன் இம்பாசிபுல் தீம் மியுசிக் ஓடிக்கொண்டிருந்தது. அங்கு வெளியே கல்லா பெட்டியை திறந்து பணம் எண்ணி கொண்டிருந்தவனை பார்த்து,
“ஏங்க, இங்க ஒரு நாலுபேர் துப்பாக்கி எல்லாம் வெச்சு வந்தாங்களே, பார்த்தீங்கள?”
“என்ன, துபக்கியா?, என்னங்க டீகாசு இல்லையா? அக்கௌண்டேல்லாம் வைகிரது இல்ல, கெளம்புங்க”
“இல்லங்க, இங்க இப்ப ஒரு பெரிய சத்தம்போட்டு கார் ஒன்னு கிளம்பிச்சுங்களே?”
“ஆமா, அது பக்கத்து யோகா சென்ட்டர் கார்தான். அங்கிருந்து அஞ்சு பேர் அவசரமா போனாங்க”
“எந்த பக்கம் போனாங்க, என்ன கார்?”
“அந்த பக்கம், செவுப்பு கார். மருதினு நனைகிறேன்”
டீகடைக்கரன் ஏதும் பிரச்சனையா என்று கேட்பதை கேளிராமல், அவன் ஓடினான். அங்கு வழியில் நின்றிருந்த ஆட்டோவில் சடால் என ஏறி, “இந்த பக்கமா போங்க” என்றான்.
“எங்க சார் போவனும்”
“நீங்க இந்த பக்கமா போங்க நான் சொல்றேன்”
அவன் காட்டிய திசையில் சிறிது தூரம் வந்தவுடன் அந்த வீதி இடது வலதாக பிரிந்தது. அவன் கீழே இறங்கி ஏரியாவை உணற முயன்றான். அவர் இங்குதான் இருக்கிறார் என்று அவனுக்கு தோன்றியது. அவனது இன்ச்டின்க்ட்ஸ் மீது அவனுக்கு அதீத நம்பிக்கை உண்டு. அவன் விடுக்கென்று நடக்க துவங்கினான்.
“ஹலோ, யாரு, சார் நீங்க? காச கொடுத்துட்டு எங்க வேணும்னாலும் போங்க”
நின்றான். திரும்பினான். ஆட்டோகரனை முறைத்து பார்த்து தான் யார் என்பதை கூறினான். ஆட்டோக்காரன் அடங்கியவனாய் பயபக்தியுடன், “நீங்க போங்க சார், காசெல்லாம் பாத்துக்கலாம் சார்”
திரும்பி நடக்க துவங்கினான். இடது பக்கம் இருந்த தெரு பரிச்சயம் போல் உணர்ந்தான். நடந்தான். அப்பொழுதுதான் அந்த வீட்டை கவனித்தான். வெளி பக்கம் மாடிப்படி கொண்ட டுப்ப்லே ரக வீடு. அது அவனுக்கு ஒரு காலத்தில் ட்ரைனிங் கொடுக்க பெற்ற செப் ஹௌஸ். வீட்டின் வாயிலில் சிவப்பு மாருதி! ஆள் அரவம் இல்லை, கம்பௌந்து சுவரை தாவி குதித்தான். சத்தம் இன்றி பூனை போல அந்த படிக்கட்டுகள் வழியாக மொட்டைமாடி அடைந்தான். அங்கிருந்து உள்ளே இருந்த முற்றத்தை காண முடிந்தது. முற்றத்தின் அருகே ஒரு அறையிலிருந்து கூச்சல் குரல்கள். கூச்சல்களுக்கு நடுவே அவர் குரல். சடால் என்று முடிவெடுத்து, பைப் பிடித்து கீழே இறங்க துவங்கினான். முற்றத்தை அடைந்ததும் சத்தம் இன்றி துளசி மாடத்திற்க்கு பின்னால் ஒளிந்தான். சுற்றி பார்த்து அவன் அந்த கூச்சல் அறைக்கு அருகே இன்னொரு அறை இருப்பது கண்டு சட் என்று உள்ளே நுழைந்தான்,
அது தான் அந்த வெள்ளை அறை. அங்குதான் அந்த நிழல் ஆடிய முகம் இருந்தது. “நீ, அவர தேடி இங்க வருவேன்னு நினைச்சேன், வந்துட்டே” என்றான், நேற்றிபோட்டில் துப்பாக்கி அழுத்தியவாறு, “Welcome to hell”
அப்பொழுதுதான் அந்த கடத்தல் அவனை இங்கு வரவழைக்க நடத்தப்பட்ட நாடகம் என்று உணர்ந்தான். அவர்.... அவர்...

அதற்குள் பின்னாலிருந்து ஒருவர் உள்ளே வந்து அவனை பற்றி நகரமுடியாமல் பிடிக்க, அந்த நிழல் முகம் துப்பாக்கியை எடுத்து அவன் கைகள் அருகே வைத்து ட்ற்றிக்கரை அழுத்தியது. சைலேன்செர் ஒளியை அழுத்த, சுருக் என்று ஒரு வலி. வெள்ளை அறை அவன் கண்கள் முன்பு சுற்றி சுற்றி வர அவன் நினைவிழந்தான்.

                           *****************************

“டாக்டர், நீங்க கொடுத்த செடடிவ் இன்ஜெச்டிப்ல் வச்சு அவன தூங்க வச்சிருக்கோம்”
கண்ணாடி அறை வெளியே டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார் அவர். கண்ணாடி அறைக்குள் அவன். மயக்கத்தில்.
“நேத்துல்லாம், ஹி வாஸ் ஓகே. இனிக்கு யோகா சென்டர்ல என்னலாமோ பேச ஆரம்பிச்சான். ஏதோ கர்வ மார்க்னான், மொசாட்னான், அப்புறம் பேசலாம்னு சொல்லி யோகா பண்ண ஆரம்பிச்சான். அதுக்குளையும், எனக்கு பிசினஸ் விஷயமா அவசரமா போக வேண்டிருந்தந்து. ஆபீசெலேர்ந்து ஆளு வந்திருந்தாங்க. அவன்கிட்ட இங்கேயே இரு, நான் இப்ப வரேன்னு சொலிட்டு போனேன். அப்புறம் திடீர்னு எழுந்து ஓட ஆரம்பிச்சானாம், யோகா சென்டேர்லேன்ர்ந்து போன் பண்ணினாங்க, அங்க பொய் விசாரித்துல பக்கத்து டீக்கடைலே எங்க கார் எந்த பக்கம் போச்சுன்னு கேட்டுகிட்டு ஓட அரம்பிச்சதா சொன்னாங்க” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே துக்கம் தாங்காமல் அழத்துவங்கி விட்டார்.
டாக்டர் அவரை ஆசுவாச படுத்திக்கொண்டு,
“பயபடாந்தீங்க, எல்லாமே தெரிந்த சிம்டம்ஸ் தான். உங்க மகன் கொஞ்ச கொஞ்சமா அவர் சநிட்டி இழந்து வருகிறார். கிரைம் பிக்ஷ்ன் நோவேல்களிலும், கம்ப்யூட்டர் கேம்ஸ்களிலும், திரைப்படங்களிலும் நடப்பது போன்றே தமது நிஜ வாழ்விலும் நடக்கிறது என்று எண்ண துவங்கிவிட்டார். நீங்க பேசிவிட்டு வெளிய வந்தது உங்க மகன் மனதில் யாரோ உங்களை கடத்தி விட்டார்கள் என்று கூட நினைத்திருக்கலாம். Probably, that’s why he left in such a hurry, to try and save you. அவர் உண்மை மற்றும் பிக்ஷ்ன்னுக்கு இடையே மாட்டிக்கொண்டு இருக்கார். But don’t worry, there’s a cure for everything today”
அவர், சுதாரித்துக்கொண்டு, “எங்கலாமோ தேடினேன் டாக்டர், கடைசியிலே எங்க வீட்டிர்க்கே பைப் வழி இறங்கி வர்றான். இன்ஜெக்ஷன ஏதோ துப்பாக்கி மாதிரி பாத்தான். அம்மா இல்லாத அவனை சின்ன வயசுல தனியா விட்டு போனதுனால தான சார் இது எல்லாம்...”
“அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்ப கொஞ்சம் அக்க்றேசிவா இருக்கான். Get him admitted. We shall start treating him”
அவர் கவலைத்தோய்ந்த முகத்துடன் கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டிருந்தார். அவன் சிறிது சிறிதாக விழிக்க ஆரம்பித்தான்.
கண்ணாடி அறைக்குள் தடால் என விழித்தான். கை, கால் ஸ்ட்ராப் செய்யப்பட்டிருப்பதால் அவனால் நகர முடியவில்லை. அஆக்க்க் என்று கர்ஜித்தான். கண்ணாடி வெளியே அவரை பார்த்தான், “சார், டோன்ட் வொர்ரி. நான் உங்களை கப்பதறேன். ஆஆ....”


(முற்றும்)