Thursday, August 27, 2015

எல்லாம் அவன் செயல்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவஜோதி சித்தர் சுவாமிகள் கண்கள் மூடி அழ்ந்த த்யானத்தில் அமர்ந்திருந்தார். சடை முடியும், முரட்டு தாடியும், கழுத்தை சுற்றி இருந்த ருத்ராக்ஷ மாலையும் அவரது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பட்டதை பறைசாற்றின. அவரை சுற்றி அவரது பக்த்தர்கள் அவர் வாய்மொழியை எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர். அவரது சிஷ்ய கொடிகளில் ஒருவன் அவருக்கு சற சரவென சத்தம் இடும் அளவுக்கு வேன்ஜாரமரம் வீசிக்கொண்டிருந்தான். வயது உணற முடியாத அவரது முகம் சலனம் இல்லாமல் ஏகாந்த த்யானத்தில் ப்ரகாசமாகவே தெரிந்தது அவரது பக்தர்களுக்கு.
“சாமி, இப்ப முழிசிக்குவாறு. அப்புறம் யாராச்சும் குப்ட்டு அருள் சொல்வாரு. சாமி சொல்றது எல்லாம் பலிக்குதாம்” என்று பக்த கோடிகளில் ஒரு கோடி மற்றொரு கோடியை பார்த்து சற்று உரக்கவே சொல்லிக்கொண்டு இருந்தது. உடனே காவி அணிந்த ஒரு மொட்டை சிஷ்யன் அருகே சென்று, “பேசாதீங்க, தயவு செய்து அமைதி காக்கவும். சுவாமி த்யானம் செய்கிறார்” என்று முணு முணுத்தான். அதற்குள் அனைவரும் சல சலக்க ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் தனது மொச்சை கொட்டை கண்களை மெல்ல திறந்தார். அனைவரும் “சிவமே ஜெயம், ஜெயமே சிவம்” என்று உரக்க சொல்ல ஆரம்பித்தனர். சிஷ்யர்களும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ முன்பு சப்பலம் இட்டு அமர்ந்துக்கொண்டனர். மீதம் இருந்த பக்தர்கள் அந்த சிஷ்யர்களை பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதை மெளனமாக அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தாள் சீதா. அவள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீயின் நீண்ட நாள் பக்தை. கணவன் இறந்ததுலிருந்து அவள் பல சாமியார்களிடம் ஆன்மீக உபதேசம் தேடி அலைந்திருக்கிறாள். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அவளுக்கு கடந்த பத்து வருடங்களாக ஒரு ஆன்மீக குருவாக திகழ்கிறார். இன்று அவள் மனதில் ஒரே ஒரு கேள்விதான் வாட்டிக்கொண்டு இருந்தது, அவள் மகன் ரிஷியின் திருமணம். கணினி அலுவுலகம் ஒன்றில் டெலிவரி மேனேஜராக வேலை பார்க்கும் அவனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று பெண் பார்த்து கடந்த இரண்டு வருடங்களில் சலித்தே போய்விட்டது அவளுக்கு. சாமியரிடம் அதை பற்றி பேச வேண்டி அமர்ந்திருந்தாள்.
“எங்க, இவளவு பேர் இருக்கா, இவாள்ள நமள்ள எங்க கூப்ட போறா சுவாமிகள். இப்டியே வேண்டிண்டு ஆத்துக்கு போக வேண்டியதுதான்” என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அவர் சிஷ்யனை முன்னால் அழைத்து, அவனது காதில் ஏதோ சொல்கிறார், அவளை பார்த்து கைகாட்டுகிறார்.
“வாம்மா சீதா. எப்படி இருக்கே?” என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அவள் சிஷ்யனுடன் அருகே வந்தவுடன்.
“உங்க அருளால க்ஷேமமா இருக்கேன் சுவாமி. ஒரே ஒரு கவலைதான் பாக்கி. அதுக்கும் அருள்புரிஞ்ஜெள்னா நிம்மத்தியா இருப்பேன்”
“உன் கவலை என்னனு எனக்கு தெரியும். சஞ்சலப்படாதே. இன்று நீ இங்கு வரவேண்டியதும் விதி, உனது கவலை தீரப்போவதும் விதி. எல்லாம் அவன் செயல்”
“சுவாமி....”
“ஆம்,மகளே. உனது மகனின் திருமணம் இன்னும் இரண்டு மாதத்திற்குள் நிகழும், அது என் அப்பன் எனக்கு சொன்னது, நான் இப்ப உனக்கு சொல்றேன்.”
“எப்படி சுவாமி. அவன் தான் பாக்கர பெண்கள் எல்லாத்தையும் எதாவது சொல்லி தட்டி கழிக்கரானே. அவனுக்கு ஜாதகம் செரர்தே அபூர்வம், இதுல இவன் வேற…”
“கவலை படாதே. நீ உனது மகனை அழைத்துக்கொண்டு ஒருமுறை கோவிந்தவாடி குரு கோவிலுக்கு சென்று வா. குருப்பார்வை அவன்மேல் விழத்தொடங்கி அந்த குருமூர்த்தியே அவனுக்கு நல்வழி அருள்வார். முதல் எழுத்தில் துவங்கம் பெயர் கொண்ட உன் மருமகள நீ அன்னிக்கு நிச்சயம் சந்திப்பே”
“அப்படியே செய்யறேன் சுவாமி. எல்லாம் உங்கள் அருள் சுவாமி”
“அப்படி சொல்லாதே, எல்லாம் அவன் செயல்”
**********
“அம்மா கோவில் கீவில்லாம் நான் வர மாட்டேன். ஐ டோன்ட் பிலீவ் இந் ஆல் தட். நீ வேண்ணா போயிட்டு வா”
“டேய் உனக்கு நம்பிக்கை இல்லனா பரவால்ல, உன்ன விட்டா யார் டா அம்மாவை அங்க கூட்டிகிட்டு போறது, சொல்லு?”
“ஆமா, இப்படி சொல்லியே மடக்கு. வரேன், உள்ள வா, பாட்டு பாடுனுலாம் சொல்லக்கூடாது”
“நீ என்ன ட்ராப் பண்ணிட்டு கூட்டிட்டு வந்தா போதும்..”
சிறிது நேரத்தில் இருவரும் அவனது ஆல்டோ காரில் புறப்பட்டனர். வானொலியில் நச்சுன்னு நாலு பாட்டு ஒலிக்க ரிஷி காரை அவர்களது அடையார் வீட்டிலிருந்து கிளப்பி கிண்டி நோக்கி செலுத்த துவங்குகிறான்.
“என்னம்மா அந்த கோவிலுக்கு? அங்க போனா கல்யாணம் ஆயிடுமாமா?”
“ஆமாம்டா, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீயே சொன்னார். உன்னை அந்த கோவிலுக்கு கூட்டிகிட்டு போனா கல்யாணம் நடந்திரும்னு அருள் புரின்ஜார் டா. அந்த குரு பகவன் பார்வை உன்மேல பட்டுது வச்சிக்கோ, டும் டும் டும் தான்”
“என்ன கொடும மா உன்னோட. நீ இந்த காலத்தில, இதேல்லாம் நம்பரியே?”
“எப்ப பாத்தாலும் விதண்டா வாதம் பேசு. உருப்பிடிய ஒன்னும் நடக்காது. அந்த பகவான் எல்லாருக்கும் நல்லது பண்ணுவார், நாம ஜஸ்ட அவர நம்பினா போரும்”
“ஹா ஹா, நீ நம்பரே ல. என்ன நடக்குதுன்னு பாப்போம். சாமியாமா, கல்யாணம் பண்ணிவெப்பராம”
இருவரும் ஒன்றும் பேசாமல் வானொலியில் ஒலிக்கும் பாடல்களை கேட்டுக்கொண்டு காந்திநகர் மெயின்ரோடில் சென்று கொண்டிருந்தனர்.
“அடுத்த பாடல் வந்து, கல்யாணம் சம்பத்த பட்ட பாட்டு, கேட்டு ஒரு குத்து போடுவமா” என்றது வானொலி. “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாம” என்று வினவியது மறுபடியும் வானொலி.
“என்ன எழவு பாட்டு டா இது, மத்து டா அத”
“நீ வேற, நீ பொண்ணு தேடற வேகத்துக்கு, நானும் அதே பாலிசிய கடைபிடிக்க வேண்டியது தான் போல“ என்றான் ரிஷி வானொலி ஸ்டேஷன் மாற்றிக்கொண்டு.
பேச்சு ச்வரசியத்தில் அவனுக்கு பின்பு ஸ்கூட்டி ஒட்டி கொண்டு வரும் அந்த பெண்ணை ரிஷியோ அவனது அன்னையோ கவனிக்கவில்லை. அவன் செல்லும் வேகத்திலேயே அவனது பின்னே தோடர்வதுபோல் அந்த பெண் வந்துக்கொண்டிருந்தாள்.
“இங்க அடையார் சிக்னல் கிட்ட ஒரு ஹோட்டல் இருக்கு, இட்லி சாப்பிட்டு போலாம். பசிக்குது” என்றான் ரிஷி.
“சரி, அனால் சிக்கிரம் போகணும். கொவிந்தவாடி வரை போகணும். நாழி ஆச்சுனா நடை அடச்சுடுவா”
பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவனது முன்பு காந்திநகர் கிளப் அருகில் நின்றிருந்த ஒரு டிராபிக் சார்ஜன்ட் தனது கையை உயர்த்தினார். அப்பொழுது மூன்று நிகழ்வுகள் நிகழ்ந்தன. அது ரிஷியின் வாழ்வை புரட்டிப்போட போகிறது என்பது சீதாவுக்கு தெரியாது. ரிஷியின் வலது கை பக்கம் வேகமாக வந்துக்கொண்டிருந்த யமஹா மொட்டர்பைக் ரிஷியை தாண்டி அந்த சார்ஜண்டை நோக்கி இடதுகை பக்கம் வேகமாக திரும்பியது. இதைப்பார்த்த ரிஷி ரீ என்று சக்கரம் ஒலி எழுப்ப, தடால் என பிரேக் அடித்து வாகனத்தை நிறுத்தினான். பின்புறம் அவனை தொடர்வதுபோல் வந்துக்கொண்டிருந்த அந்த ஸ்கூட்டி பெண் நேரத்தில் வாகனத்தை நிறுத்த இயலாமல், தொப் என்று ஒலி எழுப்பி அவனது அல்டோவின் பின்புற பம்பர் மீது மோதி நிறுத்தினாள்.
அவனை ஓவர்டேக் செய்து முன்னே சென்ற அந்த யமஹா வாகனமும் அதன் ஓட்டுனரும் அந்த சார்ஜன்ட்டிடம் சென்று நின்றார்கள்.
“என்னயா, ரேஸ் பைக் ஓட்டினா, எங்க பாத்தாலும் ரேஸ் பண்ணுவியா? லைசென்ஸ் எடுயா” என்று அந்த டிராபிக் சார்ஜன்ட் யமஹா இளைஞ்சனை அதட்ட, ரிஷி காரை விட்டு பின்பக்கம் ஓடினான்.
“வாட் தி ஹெக். டூ யு ஹாவ் னோ சென்ஸ். வந்து இப்படி மோதிகிட்டே. பிரேக்னு ஒன்னு இருக்கு தெரியுமா?”
சீதா காரை விட்டு இறங்கினாள். முன்பக்கம் டிராபிக் சார்ஜன்ட், ஒரு கன்ச்டப்ளுடன் அந்த யமஹா இளைஞ்சனை மிரட்ட, பின்புறம் அந்த பெண்ணை ரிஷி மிரட்டிக்கொண்டிருந்தான். பின்னோக்கி நடக்க துவங்கிய சீதாவுக்கு அந்த யமஹா இளைஞ்சனும் ட்ராபிக் சார்ஜண்டும் பேசிக்கொண்டிருப்பது சற்றே காதில் விழுந்தது.
“எங்க இருந்துயா வர, ஹெல்மெட் எங்க”
“இங்க தான் சார். காந்திநகர் செகண்ட் கிராஸ் ஸ்ட்ரீட்”
சலான் நிரப்பிக்கொண்டே “பேர் என்னையா? குருமூர்தியா?”
அந்த பெயரை கேட்டவுடன் சீதாவுக்கு முதுகில் மின்னல் வெட்டினார்ப்போல் இருந்தது. ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கூறியது அவளுக்கு நினைவு வந்தது, ...“நீ உனது மகனை அழைத்துக்கொண்டு ஒருமுறை கோவிந்தவாடி குரு கோவிலுக்கு சென்று வா. குருப்பார்வை அவன்மேல் விழத்தொடங்கி அந்த குருமூர்த்தியே அவனுக்கு நல்வழி அருள்வார். முதல் எழுத்தில் துவங்கம் பெயர் கொண்ட உன் மருமகள நீ அன்னிக்கு நிச்சயம் சந்திப்பே”.... குருமூர்த்தி என்ற அந்த இளைஞ்சனை ஒரு முறை பார்த்தாள். அவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்த டிராபிக் கான்ஸ்டபிளை தாண்டி வேகமாக ரிஷியையும் அந்த பெண்ணையும் அடைந்தாள்.
“யு ஹாவ் டு பெ போர் திஸ். இந்த பம்பர் நசிங்கிருக்கு, யு வில் பெ போர் தி ரிபைர்ஸ்”
“ஹ நல்லா இருக்கே. நீங்க திடீர்னு பிரேக் அடிச்சா நா என்ன பண்றது. ஹவ் டூ ஐ னோ யு ஆர் கோயங் டு ஸ்டாப்?”
சீதா சட் என்று உள்ளே புகுந்து வளரவிருக்கும் சண்டையை தவிர்த்தாள்.
“டேய் ரிஷி, சும்மா இரு. போம்மநாட்டிஅண்ட சண்டைபோட்டுண்டு” அந்த பெண்ணை பார்த்து “நீ பயப்படாத மா. இந்த பம்பர்லாம் நாங்க பாத்துக்கறோம். உன் பேர் என்னம்மா கொழந்த”
“ஆர்த்தி”
*****************
பெசன்ட் நகரில் ஒரு துரித உணவு ஹோட்டல் ஜன்னல் அருகில் இருக்கும் டேபிள் ஒன்றில் ரிஷி அமர்ந்து கொண்டிருந்தான். அவனது முன் குருமூர்த்தி என்ற அந்த யமஹா இளைஞ்சன்.
“ஏன்டா போலிச பார்த்தா அப்டிய டா கட் கொடுப்ப. நல்ல வேளை ஒன்னும் நடக்கல”
“ஆமா டா. ஏற்கனவே நமக்கும் மாமாவுக்கும் ஆகாது. அதுல அந்த சார்ஜன்ட் வேற ஒரு கடி பிடிச்ச ஆளு. எப்பவும் ஹெல்மெட் இல்லாம அவன்கிட்ட மட்டுவேன்”
ரிஷியின் கைபேசி ஒலிக்கிறது. மறுமுனை ஆர்த்தி...
“ஹனி, யுவர் பிளான் வர்க்டு. உங்க அம்மா, எங்க அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க. ஐ தின்க், திஸ் இஸ் இட்”
“ஏன் கவலை படறே, எங்க அம்மாவை பொறுத்த வரைக்கும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வாக்கு, வேத வாக்கு. வி ஆர் கெட்டிங் மாறிட், பேபி”
“ஆனாலும் ரெஸ்டாரன்ட் சந்திப்பு இப்படி தெருமுனையிலேயே முடிஞ்சிரும்னு எதிர் பக்கல. பை தி வே, அந்த சாம்யார எப்படி கரெக்ட் பண்ணே டா”
“எல்லாருக்கும் ஒரு விலை, சுவாமியின் விலை ஒரு கிரீன் லேபில், இம்போர்டேட் ஸ்காட்ச். சுவாமி மது மாதுனு சந்தோஷமா இருக்கறவர்”
“அட பாவி. சரி ஏதோ, உங்க அம்மா ஜாதகம் மேட்ச் பண்ண அந்த ஆள் கிட்ட போக போறாங்க”
“ஏன் கவலை படறே? நம்ம குருமூர்த்தி இருக்க பயம் ஏன்,எல்லாம் அவன் செயல்”
“ஆமா டா உங்க சூப்புக்கு நன்க தான் நூடில்சு” அது குருமூர்த்தி.
“சரி ஓகே, நான் வைக்கறேன், அப்பா கூபிட்றார்”
கைபேசி இணைப்பை துண்டித்து அந்த உணவு விடுதியை வெற்றி கொண்ட மன்னர் போல நோட்டமிட்டன ரிஷி. அவனது தாய் அவன் காதலுக்கு ஒப்புதல் அளிக்க இதை விட வேறு ஒரு வழி இருப்பதாக தெரியவில்லை.
“சரி ஏதோ, கல்யாணம் நிச்சயம் ஆகா போகருது. அந்த சாமியாருக்கு வாங்கி கொடுத்த கிரீன் லேபில் வீண் போகல. ஆனா அந்த ரெஸ்டாரன்ட்ல வச்சுதான் அம்மாவுக்கு உன் மூலமா ஆர்த்திய இன்ற்றோடுஸ் பண்ணனும்னு இருந்தேன். ஆனா அதுக்கு முன்னால அம்மாவே இன்ற்றோடுஸ் பணிகிட்டாங்க”
“ஆமா நா பைக் எடுத்து வரப்ப நீ அங்க இருப்பேன்னு நா எதிர்பாக்கல. லேட் ஆயிருச்செனுதான் அவள்ளவு வேகமா வந்தேன். அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சு. அண்ட் தட் டூ, அஸ் வி எக்ஸ்பெக்டேட்”
“எஸ். ஆல் தேங்க்ஸ் டு யு நண்பா”
“ஹ ஹ, அப்படி சொல்லாதே, கன்சிட்ரிங் வாட் ஹப்பேன்டு , எல்லாம் அவன் செயல்!!!”

(முற்றும்)

No comments:

Post a Comment