அது அண்ணா
சாலையில் டிராபிக் விளக்குகள் கண் சிமிட்டி கொண்டிருந்த நேரம். ரிஷியும் அவனது
நண்பர்களும் வாரம் முடிந்ததை கொண்டாடி கொண்டிருந்தார்கள். பாண்டி பஜாரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் மது
அருந்தி விட்டு கிழக்கு கடற்க்கரை சாலை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். ரிஷி அவனது பீ எம் டபிள்யு வண்டியை
வெளிநாடுகளில் ஓட்டுகின்ற அதே வேகத்தில் சென்னை அண்ணா சாலை
வழியாக ஓட்டி தனது ஓட்டுனர் திறமையை அவனது நண்பர்களிடம் குறிப்பாக அவன் அறிகே
உட்கார்ந்து இருந்த சோனியா விடம் காட்டி கொண்டிருந்தான்.
"டேய், ஸ்பீட கொஞ்சம் கம்மி பண்ணு டா வெளிய என்ன
இருக்குனு கூட தெரியல" அது கவலையுடன் சோனியா.
"Common, this is just 100 kmph, besides இப்ப மணி நைட் 12:30, ரோட்டில டிராபிக் சுத்தமா இல்ல, ஜஸ்ட என்ஜாய். ஈ.சி.ர் ல போன அப்புறம் ரியல் வேகம் நா என்ன
நு கட்டறேன்" என்றான் ரிஷி
"நீ ஒட்டு மச்சான்,
டோன்ட் வொர்ரி" இது பின்னால்
உட்க்கந்திருக்கும் அவனது மற்ற நண்பர்களின் கோரிக்கை.
குடி போதையில்
திக்கு தெரியாமல் காரை சற மாரியாக ஒட்டி கொண்டிருந்த அவர்கள் அண்ணா சாலையில்
நந்தனம் வழியாக சென்று கொண்டிருந்த பொழுது தான் அந்த விபத்து நேரிட்டது.
'மச்சி, மெயின் ரோடிலே அங்க மாமா நின்னுருபாங்க
டா. இங்க வர லெப்ட் எடு. நோ ச்லோவிங் டௌன் போர் தீஸ் டாக்ஸ்" இது
பின்னாலிருந்து ஒரு நண்பன் குரல். அவன் மாமா என்றும், டாக்ஸ் என்றும் பாசமாக அழைத்தது நமது காவல் துறையை தான்.
ரிஷி இடது பக்கம்
ஒரு சிறிய சந்துக்குள் அவன் காரை நுழைத்தான்.
"ரிஷி, இந்த ரோடுல ஆளுங்கலாம் ரோட்டிலேயே
படுதிருப்பங்க டா, பீ கேர்புல்.
ச்லோவ்வ் டௌன்" என்றால் சோனியா.
பேசி
கொண்டிருக்கும் போதே முன்னால் ஒரு கயத்துகட்டில்லில் யாரோ படுத்திருந்தது
தெரிந்தது. ரிஷி வந்து கொண்டிருந்த வேகத்தில் அவன் யோசிக்கும் முன்னரே அந்த
கட்டிலையும் அதில் படுத்திருந்த முகம் தெரியாத நபரையும் துக்கி அடித்து விட்டான்.
ஆ என்ற சத்தம் சென்னை இரவை கிழித்து கொண்டு ஒலித்தது. வாகனத்தின் வேகத்தை குறைக்க
முயன்று கொண்டிருந்த ரிஷி அந்த கட்டிலில் படுத்திருந்த ஒருவர் அவனது வாகனத்தில்
இழுக்க பட்டு வருவதை உணர்ந்தான், ஒரு பத்து
மீட்டர்கள் முன்னே சென்ற பின்னர் அவன் வாகனத்தை நிறுத்த முடிந்தது. அந்த வீதி
முழுவதும் விளக்குகள் ஒன்றின் பின் ஒன்றாக மிநிக்கிட ஆரம்பித்தன.
"அய்யோ. அவன்
செத்துட்டான் டா. நா வேகம் வேண்டாம்னு சொனேன் ல. இப்ப என்ன டா பண்றது" அது
சோனியா.
"டேய், நீ கார விட்டு வெளிய வராத, கீப் தி என்ஜின் ரன்னிங்" என்று சொல்லி
கொண்டே பின் சீட்டு நண்பன் அவனது கார் கதவை திறந்து அந்த உயிரை சிறிது சிறிதாக
இழந்து கொண்டிருந்த நபரை காரின் டயரின் கீழிருந்து இழுத்து தள்ளி விட்டு உள்ளே
திரும்பி "கோ கோ கோ, டோன்ட் வெயிட்,
தி டாக் பாக் வில் பீ அபான் அஸ். வேகமா
போ" என்றான்.
"தட் மான் இஸ்
ஸ்டில் நோட் டேட். ஹி நீட்ஸ் ஹெல்ப். நாம மெடிக்கல் ஹெல்ப்க்கு போன்
பண்ணனும்" கதறினாள் சோனியா, பயத்துடன்,
செய்வது அறியாத ரிழியை உலுக்கி கொண்டு.
"டேய் காரை
கிளப்பு டா. கெளப்பு" என்று அந்த இன்னொரு நண்பன் கத்தினான்.
"கோ கோ கோ,
கெளம்பு" என்றான் அந்த வெளிய சென்று வந்த
நண்பன்.
வீர் என்று
சத்தம் எழுப்பி கொண்டு அந்த கார் அந்த இடத்தை விட்டு கிளம்பியது.
******************
"என்னயா
கேசு" என்றார் ராயபெட்டை அரசு மருத்துவமனை டுட்டி டாக்டர் பாதி துக்கத்தில்
இருந்த வார்டு பாயை பார்த்து.
"மெட்ரோ ரயில்
தொழிலாளிகள் சார். வட நாட்டுகாரங்க. ரோட்டல தூங்கிட்டு இருந்துருக்காங்க சார்.
எவனோ எத்தி விட்டான் போல" என்றான் அந்த வார்டு பாய் ஹிந்தி குச்சல்கள்ளிக்கு
மத்திதியில் தனது குரலை சிறிது உயர்த்திக்கொண்டு.
கொட்டாவி
விட்டுக்கொண்டே அந்த கூட்டதை நோக்கி நடந்து சென்ற டாக்டருக்கு வழிவிட்டனர் அந்த வட
இந்திய மக்கள். சூயிங் கம் மென்று கொண்டிருந்த நர்ஸ் ஒருத்தி ச்ற்றேட்சேர்ரில் படுத்திருந்த
அந்த சிறுமியுயைம் அந்த நடுத்தர வயது நபரையும் பல்ஸ் பார்த்து கொண்டிருந்தார்.
டாக்டரை பார்த்த உடன், "டாக்டர், டி.ஒ.எ போல இருக்கு, பல்ஸ் இல்ல", என்றாள்.
"ஹ்ம்ம்"
என்று முனகிய டாக்டர் இரண்டு பேர்களையும் கழுத்தில் பல்ச பார்த்தார். பின்பு
கண்களை திறந்து டோர்ச் அடித்து பார்த்தார். ச்டேதேச்கோப் வைத்து இருதய துடிப்பை
பார்த்து விட்டு, பெருமுச்சு விட்டார். "டி.ஒ.எ தான். யாரு போலீஸ்
ரேப்றேசெண்டடிவ்? " என்று
கூபிட்டார்.
கான்ஸ்டபள் ஒருத்தர் தனியே நின்று செல் போனில் பெசிகொண்டிருந்தார். "டாக்டர் ஒரு நிமிஷம் நான் தான்." என்று சொல்லிக்கொண்டு, போனில் "சார் டாக்டர் கூபிடராறு அப்டேட்ஸ் கேட்டு சொல்றேன்" என்று சொலிக்கொண்டு டாக்டரை நோக்கி நடந்து வந்தார்.
கான்ஸ்டபள் ஒருத்தர் தனியே நின்று செல் போனில் பெசிகொண்டிருந்தார். "டாக்டர் ஒரு நிமிஷம் நான் தான்." என்று சொல்லிக்கொண்டு, போனில் "சார் டாக்டர் கூபிடராறு அப்டேட்ஸ் கேட்டு சொல்றேன்" என்று சொலிக்கொண்டு டாக்டரை நோக்கி நடந்து வந்தார்.
"சார், விக்டிம்ஸ் ரெண்டு பெரும் இறந்துடாங்க. திஸ்
இஸ் எ கேஸ் ஒப் டி.ஒ.எ. " என்றார் டாக்டர்.
"சரி டாக்டர்.
நீங்க டி.ஒ.எ செர்டிபிகாடே கொடுங்க." என்றார். செல் போனில் ஏதோ நம்பர் டயல்
செய்து கொண்டு சுவரோரம் சாய்ந்து நின்றார்.
அந்த டாக்டரை
ஹிந்தியில் ஏதேதோ பேசிக்கொண்டு அந்த கூட்டம் சூழ்ந்து கொண்டது. அவர் கையை
தூக்கிகொண்டு, "இவங்க
இறந்துட்டாங்க, உங்களுள தமிழ்
தெரிஞ்சவங்க யாரவது இருக்கீங்களா" என்று கேட்டார்
"மெய்ன் ஹூன்,
டாக்டர் எனிக்கு டமில் புரியம்." என்று
சொல்லிக்கொண்டு ஒரு இளைஞ்சன் முன்னே வந்தான்.
"இவங்க ரெண்டு
பெரும் இறந்துட்டாங்க. இன்டர்னல் ப்லீடிங். உள்ள இருக்குற உறுப்புக்கள் செயல்
இழந்துடுச்சு. கொஞ்சம் சீக்கிரம் கொண்டு வந்துருந்தா காபாத்திருக்கலாம். ஐ அம்
சாரி. அவங்க கிட்ட சொல்லிடுங்க" என்றார்.
அந்த இளைஞ்சன்
மொழிபெயர்த்து சொல்லும் முன்னே தனது கணவன் மற்றும் குழந்தையின் நிலைமை புரிந்த
அந்த பாஷை தெரியாத மனைவி கதறிக்கொண்டு அந்த இரண்டு ச்ற்றேட்சேர்கள் நடுவே மாறி
மாறி ஓடி கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் தனது குழந்தையை கட்டி கொண்டு அழுதாள்,
பின் ஓடி சென்று தனது கணவனை கட்டி கொண்டு
அழுதாள்.
இன்ஸ்பெக்டரிடம்
பேசிவிட்டு அங்கே வந்த அந்த புது கான்ஸ்டபள் இந்த காட்சியை பார்த்து தானும்
கண்கலங்கி விட்டார். அந்த இளைஞன் அந்த பெண்மணியை ஆசுவாச படுத்த முயன்று கொண்டிருந்தான்.
அந்த சூயிங் கம் மென்று கொண்டிருந்த நர்ஸ் அவசர அவசரமாக அந்த கூட்டத்தை விட்டு
விலகினாள். மற்ற ஹிந்தி சக தொழிலாளிகளும் ஹிந்தியிலே ஏதேதோ சொல்லி அழுது
கொண்டிருந்தனர்.
டாக்டர் தனது
அறையில் இருந்து இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்தார். எழுந்து வந்து தனது மேஜை
முன் இருந்த அந்த ஜன்னலை அடைத்து சூழ்ந்து கொண்டிருந்த சோகத்தை அறைக்கு வெளியே அடைத்தார்.
இது அவர் தினமும் பர்ர்த்து பழிகிப்போன ஒரு காட்சி. அப்பொழுது "எக்ஸ்குஸ் மீ,
டாக்டர்" என்று சொல்லிக்கொண்டு அந்த
கான்ஸ்டபிள் உள்ளே நுழைந்தார்.
"டாக்டர், இன்ஸ்பெக்டர் போஸ்ட் மோர்டேம் எல்லாம் வேணாம்
நு சொளிட்டார். கிளியர் கட் கேஸ் ஒப்
நெக்ளிஜென்ட் டிரஈவிங். சாட்சி யாருமே இல்ல. யாரையும் இன்வேச்டிகக்ட் பண்ண
முடியாது. அப்புறம் விக்டிம்சொட மனைவி அவங்க ஒர்கன்ச தானம் பண்ணும்னு சொல்றாங்க
சார்" என்று சொன்னார்.
டாக்டர் தனது
ஜன்னலை திறந்து தனது குழந்தையை கட்டி கொண்டு அழுது கொண்டிருந்த அந்த பெண்மணியை
மரியாதையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த தமிழ்
தெரிந்த இளைஞ்சன் ஒரு நர்ஸிடம் அவர்கள் குறிப்புகளை கொடுதுக்கொண்டுருந்தான்.
"பேரு"
"சுனைனா , ஷரிப்"
"வயசு?"
"எட்டு , முப்பத்தாறு"
******************
அப்போல்லோ
மருத்துவமனையின் சிப் டாக்டர், கோதண்டம் அவரது
அறையில் பரபரப்பாக இருந்த திலீப சக்ரவர்த்தியிடம் பேசி கொண்டிருந்தார்.
"அது மேதநோல்
போயசொநிங் சார். காரணியா பாதிச்சிருக்கு. உங்க மகன் இனி பார்க்கிறதுக்கு ஒரே வழி
கோன்ர்நிய திருன்ச்ப்லான்ட் தான், அது இல்லாம ஹெட்
இஞ்சுரிநாலா நிறைய ப்ளட் ப்ளட் லாஸ் வேற"
பல தொழில்களுக்கு
அதிபரான திலீப் கண்ணீர் மல்க டாக்டரிடம், "டாக்டர் ப்ளீஸ் டூ சம்திங். என்ன ஆனாலும் பறவாஇல்லை,
என் மகன் பாக்கணும். சில கிரிமினல் ஏலேமேன்த்ஸ்
இவனை நட்பு காண்பித்து இவனுக்கு கள்ள சாராயம் ஊற்றி கொடுத்து, மண்டையில் அடித்து காரை திருடி கொண்டு
விட்டனர். இவன் எப்படியாவது சரியகனும். ப்ளீஸ் டூ சம்திங்" என்று கதறினார்.
திலீப், ரிஷியுடைய தந்தை. தனது மகன் எங்கோ மகாபலிபுரம்
அறுகே போதையில் மயங்கி இருப்பதை அறிந்து விரைந்து இருக்கிறார். அங்கே அவன் மட்டும்
படுத்து இருக்கிறான், காரையும் அதில் இருந்த
அவனது நண்பர்களும் தென்பட வில்லை. அவசர அவசரமாக அவனை, அவரும் அவரது டிரைவரும் தூக்கியபோதுதான் அவனது சிரத்தில்
இருந்து குருதி வடிவதை உணர்ந்தார்.
இப்பொழுது ரிஷி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிட்சை அறையில் இருந்தான்.
இப்பொழுது ரிஷி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிட்சை அறையில் இருந்தான்.
"நீங்க கொஞ்ச
நேரம் வெயிட் பண்ணுங்க. நான் கண் வங்கிகள் கிட்ட என்குயரி பண்ண சொல்றேன். எப்ப
கிடைக்கும்னு சுறா சொல்ல முடியாது. பட் கிடைச்ச உடனே ரேப்லஸ், பண்ண சொல்லிடறேன். டோன்ட் வொர்ரி. ஐ
வில் ஹவ் தி பெஸ்ட் டாக்டர்ஸ் ஒன் திஸ்" என்றார் கோதண்டம்.
அடுத்த நாள்
திலீபிர்க்கு போன் செய்தார் கோதண்டம், "மிஸ்டர் திலீப்,
வி ஆர் லக்கி. ஒரு
ஆக்சிடென்ட் கேஸ், எவனோ பணக்காரன்
கரை வச்சு ரோட்ல படுத்துகிட்டு இருந்த வோர்கேர்ச எத்திடான். அதுல ஒரு சின்ன பொண்ணு
கண்ணு அவைலபுல்லா இருக்கு. நீங்க சொன்ன உடனே ரேகுஸ்ட் பண்ணலாம்." என்றார்
"ஒஹ் தன்க் காட்.
நான் கும்பிடுற தெய்வம் என்ன கைவிடல. நிச்சயமா டாக்டர். டோன்ட் வொர்ரி அபௌட் மணி.
அது நான் பாத்துக்கிறேன். அப்புறம் அந்த டோனோர் பேர் என்ன டாக்டர். ஐ வான்ட் டு டூ
சம்திங் போர் தி பாமிலி"
"அந்த பொண்ணு பேரு
சுனைனா, மிஸ்டர் திலீப். நேத்து
ராத்திரி தான் கார் அக்சிதேன்டுல இறந்துருகாங்க. சின்ன வயசு தான், எட்டு வயசு. பாவம், அவங்க பாமிலி மெட்ரோ ரயில் வோர்கேர்ஸ் போலேருக்கு.
அப்பாவும் அக்சிதேன்டுல இறந்துட்டாராம். ஐ சால் கெட் யு தேர் டிடைல்ஸ். நீங்க
அவங்க கிட்ட கம்முநிகாட் பணிகாங்க."
போனை வய்த்த
திலீப், கண்கள் மூடி அவரது
அறையில் இருந்த ஒரு கிருஷ்ணர் படத்தின் முன்னே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்.
எங்கோ "குறை
ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி
கண்ணா" என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
(முற்றும்)
No comments:
Post a Comment